சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 27) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீர்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகர்கள் இதில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai