சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில்  43 மனுக்களுக்கு தீர்வு

    By DIN  |   Published on : 26th June 2019 09:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 43 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. 
    பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபற்ற இந்த முகாமில், பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். 
    இந்த முகாமில் பெறப்பட்ட 179 மனுக்களில், 43 மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு பட்டா நகல் மற்றும் சிறு, குறு விவசாயிகள் சான்று ஆகியவை வழங்கப்பட்டது.
    முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், சமூக பாதுகப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai