Enable Javscript for better performance
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு சேர விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published On : 28th June 2019 08:56 AM  |   Last Updated : 28th June 2019 08:56 AM  |  அ+அ அ-  |  

    பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
    பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு பட்டயச் சேர்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு 30.5.2019-இல் நடைபெற்றது. மீதமுள்ள 156 காலியிடங்களை அமைப்பியல் துறை காலியிடம் 49, இயந்திரவியல் துறை காலியிடம் 1, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை 13, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை 42, கணிப்பொறியியல் 51) நிரப்பிட தொழில்நுட்பக் கல்வி இயக்கத்திலிருந்து அனுமதி கிடைத்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 28) சமர்பிக்க வேண்டும்.  கல்லூரி வளாகத்தில் ஜூலை ஆம் தேதி காலை 10.30 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும். முதல்கட்ட கலந்தாய்வுக்கு அழைப்புக் கடிதம் பெற்று பங்கேற்க இயலாத, பட்டய சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்யும் மாணவ, மாணவிகள் தவறாமல் பங்கேற்று முதலாமாண்டு சேர்க்கையைப் பெறலாம். இக்கல்லூரியில் படிப்பதற்கான கல்லூரி கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2,200 மட்டுமே. இக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை, இலவசப் பேருந்து பயணச்சலுகை மற்றும் அரசு நல திட்டங்களைப் பெறலாம். மாணவிகளுக்கு கல்லூரி அருகே இலவச மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விரைவில் விடுதி தொடங்கபட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-243200 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp