மானாவாரி பருத்தி சாகுபடிக்கு பூசா ஹைட்ரோ ஜெல் அவசியம்
By DIN | Published On : 28th June 2019 08:55 AM | Last Updated : 28th June 2019 08:55 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் மானாவாரியாக சாகுபடி செய்யப்படவுள்ள பருத்திக்கு பூசா ஹைட்ரோ ஜெல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி மாரியப்பன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மானாவாரியாக பருத்தி பயிரிடப்பட உள்ளது. இனிவரும் பருவங்களில் மழையளவு குறைந்து வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், பூசா ஹைட்ரோ ஜெல் ஒரு கிலோவுடன் 22 கிலோ மணலைக் கலந்து ஒரு ஏக்கருக்கு கடைசி உழவின்போது இட வேண்டும். இது வறட்சிக் காலங்களில் பயிரின் வேர்களுக்கு நீரை சிறிதுசிறிதாகக் கொடுக்கிறது. பூசா ஹைட்ரோ ஜெல்லானது, அதன் எடையை விட 400 மடங்கு நீரை உறிஞ்சி வைக்கும் தன்மையுடையது. நிலத்தில் ஓராண்டு வரை விதை முளைப்பு, வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும். பூசா ஹைட்ரோ ஜெல் ஒரு கிலோவின் விலை ரூ. 1,800. விவசாயிகள் இதை வயலில் இட்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை நேரில் அல்லது உழவியல் தொழில்நுட்ப வல்லுநரை 88382 55728 எனும் எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.