விடுதி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி
By DIN | Published On : 02nd March 2019 08:40 AM | Last Updated : 02nd March 2019 08:40 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல விடுதி மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து விடுதிகளில் தங்கி பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேற்படிப்பு, நுழைவுத் தேர்வு, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் விதம், சுயதொழில் தொடங்குதல், கடனுதவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெ. ராஜேந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு. முரளிதரன் மற்றும் 352 விடுதி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.