பட்டயத்தேர்வு: மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th March 2019 08:58 AM | Last Updated : 04th March 2019 08:58 AM | அ+அ அ- |

தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் தேர்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் வெளியிட்ட அறிக்கை: ஜூன் 2018- இல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
விடைத்தாள்களின் நகல் பெற, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து விண்ணப்ப, அதற்குரிய கட்டணத் தொகையுடன் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மார்ச் 5 முதல் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.