முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை, மேக்கேதாட்டு அணை குறித்த தனது நிலைப்பாட்டை பிரதமர் தெளிவுபடுத்த

முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை, மேக்கேதாட்டு அணை குறித்த தனது நிலைப்பாட்டை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன். 
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மக்களவைத் தேர்தல் 2019-பிரச்னைகளும், தீர்வுகளும், விவசாயிகள் சந்திப்பு எனும் தமிழகம் தழுவிய பரப்புரை பயணத்தை மார்ச் 1 ஆம் தேதி பென்னி குயிக் மணி மண்டபம் அருகே தொடங்கினர். இப் பரப்புரை பயணம் பெரம்பலூருக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது. 
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் வழங்கிய பரப்புரை பயணக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: 
இந்தியாவில் கடந்த 5 ஆண்டு காலமாக மோடி அரசு விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சியை செய்துவருகிறது. விவசாயக் கடன் தள்ளுபடி அளிக்க மறுப்பு தெரிவித்தார். எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிக்கையை நிறைவேற்ற மறுத்தார். தமிழகத்தின் நீராதார பிரச்னைகளால் மாநிலங்களுக்கிடையேயான உறவுகளை சீர்குழைத்தார். கடந்த 5 ஆண்டு காலம் தென்னக உறவுகளை சீர்குழைக்க முயற்சித்தார். காவிரி குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு, கோதாவரியை காவிரியுடன் இணைப்பேன் என்கிறார். இது மோசடியான திட்டமாகும்.
அடுத்த பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பங்கேற்கும் போது, முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை, மேக்கேதாட்டு அணை குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், தமிழக விவசாயிகள் ஒன்றிணைந்து வாக்கு கேட்கவே அனுமதிக்கமாட்டார்கள் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், தஞ்சாவூர் த. புண்ணியமூர்த்தி, பாலாறு ஏ.சி. வெங்கடேசன், மதுரை எல். ஆதிமூலம், நாகப்பட்டினம் எஸ். ராமதாஸ், தருமபுரி சின்னசாமி, மன்னார்குடி மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com