எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வு: பெரம்பலூரில் 8,656 மாணவர்கள் எழுதினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வில் 8,656 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  

பெரம்பலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வில் 8,656 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.  
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 45 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4,513 மாணவர்களும், 4,143 மாணவிகளும் என மொத்தம் 8,656 பேர் தேர்வு எழுதினர். 82 மாணவர்களும், 39 மாணவிகளும் என மொத்தம் 121 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வு மைய கண்காணிப்புப் பணியில் 37 முதன்மை கண்காணிப்பாளர்களும், 37 துறை அலுவலர்களும், 6 கூடுதல் துறை அலுவலர்களும், 49 பறக்கும் படை அலுவலர்களும், கேள்வித் தாள், விடைத்தாள் எடுத்துச் செல்ல 11 வழித்தட அலுவலர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
தனித்தேர்வர்களாக 168 பேர்:
இதேபோல, தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்காக 180 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். 
இதில், 12 மாணவர்கள் தேர்வு எழுத வருகை புரியாததால் 168 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 
வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கிய பொதுத்தேர்வில் கேள்வித்தாள் படிக்க 10 நிமிடங்களும், விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சரி பார்க்க 5 நிமிடமும், விடையளிக்க 2.30 மணி நேரமும் கால அவகாசம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com