சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையிலும்  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள், சிலைகள் மூடி மறைக்கப்படாமல் உள்ளன. 
  குறிப்பாக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகம் எதிரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் ஜெயலலிதாவின் உருவப் படம் காணப்படுகிறது. இந்த படத்தை அகற்றவோ, மறைக்கவோ அதிகாரிகள் முயற்சிக்கவில்லை.
  இதேபோல, பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலின் முகப்பில் உலோகத்தில் பதிக்கப்பட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா எனும் பெயர், புறநகர் பேருந்து நிலைய வளாகம் அருகிலுள்ள அம்மா உணவகத்திலும்,  மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் இதுவரை மறைக்கப்படாமல் உள்ளது.  
  தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள், பெயர்கள் ஆகியற்றை அகற்றுதல், மறைத்தல், அழித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது. அதில், அரசுக்கு சொந்தமான இடங்களுக்கு 24 மணி நேரம், பொது இடங்களுக்கு 48 மணி நேரம், தனியார் இடங்க ளுக்கு 72 மணி நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில்  இதற்கான நேரம் கடந்தும்அரசியல் தலைவர்களின் சிலைகள், படங்கள் மறைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai