சுடச்சுட

  

  அனுமதியின்றி துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தால் நடவடிக்கை

  By DIN  |   Published on : 17th March 2019 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அனுமதியின்றி துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி. 
  மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் மேலும் பேசியது:      
  தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள் அச்சக வெளியீட்டாளர்களை அணுகி துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடிக்க வாய்ப்புள்ளது. அதில், அச்சகத்தின் பெயர், முகவரி, பிரசுரங்களின் எண்ணிக்கையின் விவரம் இடம் பெற்றிருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு அரசியல் கட்சியை அல்லது வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவரத்தை பிரசுரிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அரசியல் கட்சிகள், வேட்பாளர் சம்மதமின்றி விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டால், அச்சக உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும். பொது இடங்கள், நகராட்சி பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்க அனுமதியில்லை. மீறி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதோடு, வழக்குப் பதிந்து 6 மாதம்  சிறை தண்டனை அல்லது ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். எனவே தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட விதிமீறல்களுக்கு முரண்பாடாக செயல்படும் அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் மீதும் கடு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்தல் ஆணைய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அழகிரிசாமி.   கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் பி. மஞ்சுளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai