சுடச்சுட

  


  பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, அக் கட்சியின் மாநில நிர்வாகி வழக்குரைஞர் பி. காமராஜ் தலைமை  கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 
  ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச் சம்பவத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு வழக்கு நடத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் மற்றும் முகவரியை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 
  மாவட்டத் தலைவர் ஆனந்தன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் வினோத், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் சத்குரு, பொறுப்பாளர்கள் சத்யா, பிரவீன், மகளிரணி பொறுப்பாளர் முத்துலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai