மின் வாரியத்தில் காலியிடத்துக்கான பணி நியமனங்களை அதிகரிக்க வேண்டும்

மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பணி நியமனம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பணி நியமனம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என மின் வாரிய ஊழியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டக் கிளை சிறப்புப் பேரவைக் கூட்டம், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வட்ட தலைவர் கே. கண்ணன் தலைமை வகித்தார்.  மாநில துணைத் தலைவர்கள் எஸ். அகஸ்டின்,  மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். 
கூட்டத்தில், கேங் மேன் பதவியை கள உதவியாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில், 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மின் வாரியத்தில் நீண்ட நாள்களாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களைக் கொண்டு, கள உதவியாளர் பதவிக்கு ஆள்களை நியமிக்க வேண்டும். அரியலூர், பெரம்பலூர் என இரண்டு வெவ்வேறு மின் கோட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com