41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக் காலமாக அறிவிக்க சாலைப் பணியாளர்கள் வலியுறுத்தல்

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டுமென மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டுமென மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்,  பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலர் ஆ. அம்சராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி. தயாளன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். 
கூட்டத்தில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியத் தொகுப்பில் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள் மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், போராட்டத்தில் கலந்துகொண்டு ஊதியத்தை இழந்தவர்கள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 
இதில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு, மாவட்ட செயலர் கொளஞ்சி, மாவட்ட துணைத் தலைவர் துரை. ரெங்கன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சங்க மண்டல பொருப்பாளர் சூரியகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட இணைச் செயலர் முத்து வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com