Enable Javscript for better performance
போதிய ஆவணங்கள் இல்லாததால் ம.நீ.ம. வேட்பாளர் மனு ஏற்க மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    போதிய ஆவணங்கள் இல்லாததால் ம.நீ.ம. வேட்பாளர் மனு ஏற்க மறுப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் என். செந்தில்குமாரின் வேட்புமனுவை போதிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ம.நீ.ம கட்சி சார்பில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட சென்னையைச் சேர்ந்த அருள்பிரகாசம் வேட்பாளராக அறிவித்ததற்கு உள்ளூர் கட்சி நிர்வாகிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது. 
    இதையடுத்து, திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அருள்பிரகாசம் மாற்றப்பட்டு, பெரம்பலூரைச் சேர்ந்த என். செந்தில்குமார் (44), வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 
    வேட்புமனு தாக்கல் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மதியம் 2.58 மணிக்கு, பெரம்பலூர் மாவட்ட செயலர் முத்துக்குமார் தலைமையில் 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். தொடர்ந்து, 3.20 மணிக்கு சில ஆவணங்களுடன் ஆட்சியரகம் வந்த மநீம வேட்பாளர் செந்தில்குமாரை உள்ளே அனுமதிக்க  மறுத்த போலீஸார் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதித்தனர்.  
    இந்நிலையில், சிறிது நேரத்தில் வெளியே வந்த ம.நீ.ம வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலரான வே. சாந்தா வேட்பு மனுவை ஏற்க மறுத்துவிட்டார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
    ம.நீ.ம வேட்பாளர் வேட்பு மனுவுடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவரது வேட்புமனு ஏற்கப்படவில்லை என  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai