Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சிகிச்சை பெற்று வந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
    பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோ. கருப்பண்ணன் (86). இவர், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள அவரது மகன் தர்மலிங்கம் வீட்டில் தங்கியுள்ளார். 
    இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மின் நகர் அருகே சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் கருப்பண்ணன் பலத்த காயமடைந்தார். 
    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, தர்மலிங்கம் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து எழுமூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் அருண்குமாரை (25) கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai