Enable Javscript for better performance
அதிமுக வேட்பாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் அருகே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாததைக் கண்டித்து, வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக வேட்பாளரை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் புதன்கிழமை காலை பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவருடன், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் வாக்கு சேகரிக்கச்சென்றனர். செட்டிக்குளம், பொம்மனப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி, து. களத்தூர் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது, அங்குள்ள கிராம மக்கள் வேட்பாளர் சிவபதி, சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இத்தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் ஆர்.பி. மருதராஜா, தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான பிறகு இதுவரை, இப்பகுதிக்கு வரவில்லை. மேலும், இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காணவில்லை எனக்கூறி, வேட்பாளரிடமும், சட்டப்பேரவை உறுப்பினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேட்பாளருடன் சென்ற கட்சி நிர்வாகிகள் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai