Enable Javscript for better performance
கனிமங்கள் வெட்டி எடுத்து கடத்தல்: புகார் அளிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தல், சேமித்து வைத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தல், சேமித்து வைத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட மற்றும் வட்ட அளவில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  
    அதன்படி, மாவட்ட தலைவராக ஆட்சியர் (94441 75000), செயலராக கனிமவள துணை இயக்குநர் (94448 22810),  உறுப்பினர்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (94981 23777), மாவட்ட வருவாய் அலுவலர் (94450 00920), வருவாய் கோட்டாட்சியர் (94450 00458) ஆகியோரைக் கொண்ட மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதேபோல, வட்டாட்சியர்கள் 
    (94450 00610 - பெரம்பலூர்), வேப்பந்தட்டை (94450 00611), குன்னம் (94450 00612), ஆலத்தூர் (94450 00623) ஆகியோர் வட்ட அளவிலான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்களை வெட்டி எடுத்தல், சேமித்து வைத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான புகார்களை மாவட்ட மற்றும் வட்டக்குழு உறுப்பினர்களிடம் தங்களது புகாரை மனுக்களாக அல்லது செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai