Enable Javscript for better performance
பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி: டி. ஆர். பாரிவேந்தர் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி: டி. ஆர். பாரிவேந்தர் உறுதி

    By DIN  |   Published on : 28th March 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூரில் கிடப்பில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தர். 
    பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம், பெரம்பலூர், அரணாரை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியது:
    பெரம்பலூர் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை களைய கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் நகர மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் குடிநீர் வழங்கப்படும். திமுக அரசால் அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டம் செயல்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான பெரம்பலூர் - நாமக்கல் வரையிலான ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அவர். 
    பிரசாரத்தின்போது, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, திமுக மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தமிழ்செல்வன், ஐஜேகே மாவட்ட தலைவர் அன்பழகன், திமுக நகர செயலர் எம். பிரபாகரன், வழக்குரைஞர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai