Enable Javscript for better performance
பெரம்பலூர் தொகுதி: சுயேச்சை வேட்பாளர்களுக்கு நாளை சின்னம் ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் தொகுதி: சுயேச்சை வேட்பாளர்களுக்கு  நாளை சின்னம் ஒதுக்கீடு

    By DIN  |   Published on : 28th March 2019 07:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 29) சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. சாந்தா.  
    இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
    மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை என மொத்தம் 32 நபர்கள் 41 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். 
    தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாத மற்றும் ஒருமுறைக்கு மேல் தாக்கல் செய்யப்பட்ட 13 நபர்களின் 22 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதியுடைய 19 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளபட்டது.  மேலும், வெள்ளிக்கிழமை (மார்ச் 29) சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் வர வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai