Enable Javscript for better performance
பெரம்பலூர் தொகுதி: வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தர், அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி, பகுஜன் சமாஜ் பார்ட்டி கட்சி வேட்பாளர் இரா. முத்துலட்சுமி, அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரன், சுயேட்சை வேட்பாளர்கள் கே. சாந்தி, டி. ஜாவித் உசேன், வினோத்குமார், வீ. அண்ணாதுரை, பி. ஆனந்தராஜ், செ. சபாபதி, கி. சுரேஷ், கருப்பையா, பெ. முருகன், ஏ. செந்தில்வேல், பெ. பச்சமுத்து, வில்சன் மெல்போர்ன், சுப்ரமணியன், உத்தமசெல்வன் உள்ளிட்ட 19 ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்களின்றி தாக்கல் செய்யப்பட்ட 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    வேட்பு மனுக்களை திரும்பப் பெற வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இறுதி நாளாகும். அதன்பிறகே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai