Enable Javscript for better performance
வேட்புமனு பரிசீலனை: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில்19 மனுக்கள் ஏற்பு: 13 தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    வேட்புமனு பரிசீலனை: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் 19 மனுக்கள் ஏற்பு: 13 தள்ளுபடி

    By DIN  |   Published on : 28th March 2019 07:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 32 வேட்பாளர்களின் மனுக்களில், 19 மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டது. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களாக போட்டியிட 32 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கான வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் புதன்கிழமை  நடைபெற்றது. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வே. சாந்தா, தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் வேட்பு மனுக்களை பரீசீலனை செய்தனர். 
    உரிய பரீசீலனைக்குப் பிறகு, பிரதான அரசியல் கட்சிகளான திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர். பாரிவேந்தர், அதிமுக வேட்பாளர் என்.ஆர். சிவபதி, அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி, பகுஜன் சமாஜ் பார்ட்டி வேட்பாளர் இரா. முத்துலட்சுமி ஆகியோரது மனுக்கள் உள்பட 19 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. மேலும், பிரதான அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 13 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 
    வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நபர்களின் விவரம்; பி. ரவி, கே. சுந்தரம், சண்முக பிரியதர்ஷினி, சந்தோஷ்குமார், ராம்குமார், ராஜா ராமநாதன், செல்வராஜ், சுப்பிரமணியன், சண்முகசுந்தரம், பாக்கியராஜ், லட்சுமணன், சக்திவேல், அறிவழகன் ஆகியோரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai