சுடச்சுட

  

  அடிப்படை வசதிகளை செய்து தராத அதிகாரிகளைக் கண்டித்து, மே 29-ஆம் தேதி உண்ணாவிரதம், சாலைமறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதென பெரம்பலூர் மாவட்டம், தேனூர் கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சிக்குள்பட்ட தேனூர் கிராமம் அண்ணா நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை எனக் கூறப்படுகிறது. 
  தெருக்களில் சிமெண்ட் தளம் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தருதல், மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல், மயான பாதையை சீரமைத்து மின் விளக்கு அமைத்தல், சமுதாயக் கூடம் அமைத்தல், நூலகம் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி செயலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். 
  இந்நிலையில், கிராம மக்கள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து, மே 29-ஆம் தேதி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai