பெரம்பலூரில் இன்று முதல்  நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு: வழக்குரைஞர்கள் முடிவு

ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு எதிராகப் புகார் அளித்த வழக்குரைஞர் ப.அருள், குண்டர் தடுப்புச் சட்டத்தின்

ஆளுங்கட்சிப் பிரமுகருக்கு எதிராகப் புகார் அளித்த வழக்குரைஞர் ப.அருள், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை (மே 14) முதல் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதென பெரம்பலூர் வழக்குரைஞர்கள் சங்க அவரசக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பெரம்பலூர் வழக்குரைஞர் சங்கத்தின் அவசர நிர்வாகக்குழு கூட்டம், அச்சங்கத்தின் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி தலைமை வகித்தார். கூட்டத்தில், அரசியல் கட்சிப் பிரமுகர் மீது புகார் அளித்த வழக்குரைஞர் ப. அருளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள தமிழக அரசின் செயலைக் கண்டிப்பது, குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (மே 14) முதல் மே 17-ஆம் தேதி வரை பெரம்பலூரில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது, மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மே-20 ஆம் தேதி அவசர நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளம்பெண்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆளுங்கட்சிப் பிரமுகர் உள்ளிட்ட பலர் மீது அருள் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com