முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
நியமன அலுவலரிடம் புகார்களை தெரிவிக்கலாம்
By DIN | Published On : 15th May 2019 08:34 AM | Last Updated : 15th May 2019 08:34 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வாடகைதாரர்கள், நில உரிமைதாரர்கள் ஆகியோர் தங்களது உரிமைகள் மீதான புகார்களை வாடகை நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாடகைதாரர்கள், நில உரிமைதாரர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் ஒழுங்கு முறைப்படுத்துதல் சட்டம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் வாடகை நியமன அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே, பொதுமக்கள், வாடகைதாரர்கள், நில உரிமைதாரர்கள் ஆகியோர் தங்களது உரிமைகள் மீதான புகார்களை வாடகை நியமன அலுவலரிடம் தாக்கல் செய்து தீர்வு பெற்று பயன்பெறலாம்.