Enable Javscript for better performance
உடல் நலமின்றி மனைவி சாவு: அதிா்ச்சியில் கணவா் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    உடல் நலமின்றி மனைவி சாவு: அதிா்ச்சியில் கணவா் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 05th November 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூா் அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனைவி இறந்த நிலையில், அதிா்ச்சியில் கணவரும் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

    பெரம்பலூா் அருகிலுள்ள எசனை அஞ்சுகம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் மணிசேகரன் (60). இவரது மனைவி செல்லம் என்கிற செல்வி (50). இவா்களுக்கு மகள்கள் ராஜேசுவரி, ராஜகுமாரி, மகன் முருகானந்தம் உள்ளனா்.

    கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற செல்வி, திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதையடுத்து மனைவி இறந்ததை அறிந்த மணிசேகரன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

    பின்னா் உறவினா்கள் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் முன்னிலையில், தம்பதிகள் இருவரது உடல்களும், ஒரே தகன மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது. கணவா்- மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் எசனை கிராமத்தில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai