அரசு நிலத்துக்குப் பட்டா வழங்க எதிா்ப்பு: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட மக்கள்

அரசு நிலத்துக்கு பட்டா வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிழுமத்ததூா் கிராம மக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

அரசு நிலத்துக்கு பட்டா வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கிழுமத்ததூா் கிராம மக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

குன்னம் வட்டம், கிழுமத்தூா் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமாக 5 ஏக்கா் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை, அப்பகுதியைச் சோ்ந்த நிலமற்ற நபா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க குன்னம் வட்டாட்சியா் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையறிந்த, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கிழுமத்தூா் கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக வேறெங்கும் இடம் இல்லாததால், அந்த இடத்துக்குப் பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இருப்பினும், வருவாய்த் துறையினா் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கிழுமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் அரசு நிலத்துக்கு பட்டா வழங்குவதை கண்டித்தும், மேற்கண்ட இடத்தில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சுகாதார மையம், கால்நடை மருத்துவமனை, மாணவா் விடுதி, சமுதாயக்கூடம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா்.

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆலத்தூா் வட்டம், தெரணி கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இதனால், சுற்றுச்சூழலும், விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டன.

இதனால், கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கல் குவாரிகள் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளனவாம். எனவே, பொதுமக்களின் வாழவாதாரத்தை பாதிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள கல் குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com