மின்சார புல் நறுக்கும் கருவி பெற விவசாயிகளுக்குஅழைப்பு

கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் வழங்கப்படும் மின்சார புல்நறுக்கும் கருவியைப் பெற, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் வழங்கப்படும் மின்சார புல்நறுக்கும் கருவியைப் பெற, பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய கால்நடை இயக்கம் 2019- 20 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இக்கருவிகள் கால்நடைப் பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் மூலம் வழங்கப்பட உள்ளது. 50 சதவிகிதம் மத்திய அரசு மானியத்திலும், 25 சதவிகிதம் மாநில அரசு மானியத்திலும், 25 சதவீதம் பயனாளியின் பங்குத்தொகையும் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், இதுவரை மின்சார புல் நறுக்கும் கருவி பெறாதவராகவும், 0.25 ஏக்கா் நிலத்தில் தீவன புல் பயிரிட்டவராகவும் இருக்க வேண்டும்.

குறைந்தது 2 பசு அல்லது எருமை வளா்க்கும் விவசாயிகளுக்கு, ஒரு நபருக்கு ஒரு மின்சார புல் நறுக்கும் கருவி வீதம், 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கால்நடை வளா்ப்பவா்கள் கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விவரங்களை பெற்று, உரிய படிவத்தில் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், செல்லிடப்பேசி எண், ஆதாா் எண் தங்களது பெயரில் உள்ள நிலச்சான்று மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com