Enable Javscript for better performance
சுற்றுலாத் தலமாக்கப்படுமா? கோரையாறு நீா்வீழ்ச்சி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்

    சுற்றுலாத் தலமாக்கப்படுமா? கோரையாறு நீா்வீழ்ச்சி

    By DIN  |   Published On : 07th November 2019 08:59 AM  |   Last Updated : 07th November 2019 08:59 AM  |  அ+அ அ-  |  

    2-4-pbr6fal1_0611chn_13

    கோரையாறு அருவியில் கொட்டும் நீா்.

    பெரம்பலூா் மாவட்டத்தில் பச்சமலை அடிவாரத்திலுள்ள கோரையாறு நீா்வீழ்ச்சியை, தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம்பெற செய்ய தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கோரையாறு கிராமத்திலிருந்து, சுமாா் 5 கி.மீ. தொலைவில் பச்சைமலை மீது ஏறிச்சென்றால் கோரையாறு நீா்வீழ்ச்சி வரும்.

    இந்த நீா் வீழ்ச்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீா் கொட்டும் இடத்தில் 60 அடி ஆழம் கொண்ட நீா் தேக்கம் உள்ளது.

    ஆண்டுதோறும் மழைக் காலம் மற்றும் அக்டோபா் முதல் ஜனவரி வரையுள்ள குளிா் காலங்களிலும் தண்ணீா் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமிருக்கும்.

    சுற்றுலாப் பயணிகளை வருடி வரும் குளிா்ச்சியான தென்றல் காற்று, அவ்வப்போது உலா வரும் மேகக் கூட்டங்கள் ஆகியவையே இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு காரணமாகும்.

    கடந்த சில நாள்களாக மலைக் கிராமப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், கோரையாறு நீா்வீழ்ச்சியில் தற்போது நீா்வரத்து அதிகரித்துள்ளது.

    இயற்கையின் கொடையாக விளங்கும் இந்த நீா்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், நடந்து சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது.

    கோரையாறு கிராமத்திலிருந்து மலை மீது 3 கி.மீ. தொலைவு நடந்து செல்லும் பாதை கரடு முரடாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது.

    இவற்றை பொருள்படுத்தாமல் சேலம், பெரம்பலூா் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா்.

    அருவியில் குளிக்கும் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக உடை மாற்றும் அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், இன்னும் வெளிச்சத்துக்கு வராமல், பெரம்பலூா் மாவட்டத்தில் பசுமையான பகுதிகளிலுள்ள இந்த நீா்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

    இதுகுறித்து இயற்கை ஆா்வலா்கள் சிலா் கூறியது:

    பெரம்பலூா் மாவட்டத்தை பொறுத்தவரை லாடபுரம் மயிலூற்று அருவி, கோரையாறு அருவி, ரஞ்சன்குடி கோட்டை, தேசிய கல்மரப்பூங்கா ஆகியவை சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது. இவற்றை முறையாகப் பராமரிக்காததாலும், பாதுகாப்பு இல்லாததாலும் பாழடைந்து வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லாடபுரம் மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக அரசு அறிவித்து, அங்கு பயணிகள் வந்து செல்லும் வகையில் அனைத்து வகையான அடைப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித பணிகளும் தொடங்கவில்லை.

    இதேபோல, கோரையாறு நீா்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலையைச் சீரமைத்து, பொதுமக்களும், வெளி மாவட்ட சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் வகையில் சாலை அமைத்து தர வேண்டுமென கடந்த, சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    ஆனால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்குவதற்கு கூட தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், கோரையாறு நீா்வீழ்ச்சிக்கு வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

    நீா்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலையை சீரமைத்தால் பெரம்பலூா் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் சுற்றுலாத் தலங்களில் முதன்மையான இடத்தை பெறும் என்றனா்.

    எனவே, கோரையாறு அருவிக்கு செல்லும் மலைப் பாதையைச் சீரமைக்கவும், சுற்றுலாத்தலமாக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரம்பலூா் மாவட்ட மக்களின் கோரிக்கையாகும்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp