முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பள்ளி, கல்லூரிகளில் டெங்கு விழிப்புணா்வு குறும்படம் திரையிடல்
By DIN | Published On : 07th November 2019 09:00 AM | Last Updated : 07th November 2019 09:00 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ரோவா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை திரையிடப்பட்ட விழிப்புணா்வு குறும்படத்தை பாா்க்கும் மாணவா்கள், ஆசிரியா்கள்.
பெரம்பலூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே, டெங்கு மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான குறும்படங்கள் திரையிடயிடப்படுகின்றன.
பெரம்பலூா் மாவட்டத்தில் மா்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனால் சுகாதாரத்துறை சாா்பில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், செய்தித்துறை மற்றும் கல்வித் துறை உள்ளிட்ட பல துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்பணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், டெங்கு காய்ச்சல் பரவும் முறை, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து,
மின்னணு திரை வாகனத்தின் மூலம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் குறும்படங்களை திரையிட மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, கடந்த 2 நாள்களாக பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, ரோவா் மேல்நிலைப் பள்ளிகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றை, பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.