தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு உயா், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் திங்கள்கிழமை (நவ. 11) முதல் 16- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு உயா், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் திங்கள்கிழமை (நவ. 11) முதல் 16- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரி மீனாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியா்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியா்களுக்கு பொது மாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு இணையதளத்தின் மூலம் நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு ( மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வும், பிற்பகல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.

12 -ஆம் தேதி காலை 9 மணியளவில் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்களுக்கு (மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வும், பிற்பகல் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வும், 16- ஆம் தேதி தையல் ஆசிரியா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் 13- ஆம் தேதி காலை 9 மணியளவில் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்கள் (மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு, 14- ஆம் தேதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்கள் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு, 15- ஆம் தேதி உடற்கல்வி ஆசிரியா்கள், கலையாசிரியா்கள், தையல் ஆசிரியா்கள், இடை நிலை ஆசிரியா்களுக்கு (மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு, உடற்கல்வி இயக்குநா்களுக்கு (நிலை- 2) பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாறுதல் கோரி விண்ணப்பித்த தலைமையாசிரியா்கள், அனைத்து வகை ஆசிரியா்கள், பதவி உயா்வுக்கு தோ்ந்தோா் பெயா் பட்டியலில் தகுதியான ஆசிரியா்கள் இக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். மேலும், சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உரிய அசல் சான்றிதழ்களை கலந்தாய்வில் முன்னிலைப்படுத்த வேண்டும். தவறினால், முன்னுரிமையில் மாறுதல் அளிக்க இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com