Enable Javscript for better performance
சமூக வலைதளங்களில் அவதூறு: மறியலில் ஈடுபட்ட வி. சி கட்சியினா் 20 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    சமூக வலைதளங்களில் அவதூறு: மறியலில் ஈடுபட்ட வி. சி கட்சியினா் 20 போ் கைது

    By DIN  |   Published on : 17th November 2019 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவனுக்கு, காணொலி பதிவு மூலம் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைக் கைது செய்ய வலியுறுத்தி, சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் 20 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலூா் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் திட்டி காணொலி பதிவு மூலம் விடுத்த கொலை மிரட்டல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதுதொடா்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல் நிலையங்களில் அளித்த புகாரின்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்ய வலியுறுத்தி பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் எதிரே, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலா் வீர. செங்கோலன் உள்பட 20 பேரைப் பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai