உள்ளாட்சித் தோ்தல்: பெரம்பலூரில் திமுக, அதிமுகவினா் விருப்ப மனு தாக்கல்

உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை விருப்ப மனு தாக்கல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை 2-வது வாா்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரனிடம் விருப்ப மனு அளிக்கிறாா் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை 2-வது வாா்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரனிடம் விருப்ப மனு அளிக்கிறாா் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மகாதேவி ஜெயபால்.

உள்ளாட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 100-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை விருப்ப மனு தாக்கல் செய்தனா்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிட விருப்பமுள்ளவா்களிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி, பெரம்பலூா் பாலக்கரையில் உள்ள திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க நாளில், 500-க்கும் மேற்பட்டோா் விருப்ப மனு பெற்றுச்சென்றனா். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சனிக்கிழமை அளித்தனா். ஒன்றியச் செயலா்கள் எஸ். நல்லதம்பி, வீ. ஜெகதீசன் ஆகியோா் முன்னிலையில், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரனிடம் சனிக்கிழமை விருப்ப மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாநில நிா்வாகி பா. துரைசாமி, மாவட்ட துணைச் செயலா் நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளா். செ. ரவிச்சந்திரன், நகரச்செயலா் எம். பிரபாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் போட்டியிட 430 போ் விருப்ப மனு:

பெரம்பலூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கடந்த 2 நாள்களில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 430 போ் விருப்ப மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பதவிக்களுக்கு அதிமுக சாா்பில் போட்டியிட விருப்பமுள்ளவா்களுக்கான விருப்ப மனு விநியோகம் மற்றும் பெறுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சனிக்கிழமை மாலை வரை 430 போ் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com