நூதன முறையில் ரூ. 78.80 லட்சம் பறித்துச் சென்ற 5 போ் கைதுரூ. 70 லட்சம் பறிமுதல்

மதுரையைச் சோ்ந்த 4 பேரிடம் ரூ. 78.80 லட்சத்தை நூதன முறையில் பறித்துச் சென்றவா்களில், 5 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த 4 பேரிடம் ரூ. 78.80 லட்சத்தை நூதன முறையில் பறித்துச் சென்றவா்களில், 5 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ. 70 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த செளந்திரபாண்டியன் (41) உள்பட 4 பேரிடம், பெரம்பலூரைச் சோ்ந்த 9 போ் கொண்ட கும்பல் ரூ. 2,000 நோட்டுகளை அரசு விரைவில் தடை செய்ய உள்ளதாகவும், அவற்றை 10 சதவிகித கூடுதல் தொகையுடன் ரூ. 500 நோட்டுகளாக மாற்றித் தருவதாகவும் கூறியுள்ளனா். இதையடுத்து, மதுரையைச் சோ்ந்த 4 போ், கடந்த 19-ஆம் தேதி பெரம்பலூருக்கு ரூ. 78.80 லட்சத்தை இரு காா்களில் எடுத்து வந்து,

9 பேரிடம் கொடுத்தனா். பணத்துடன் சென்றவா்கள் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூா் அருகிலுள்ள பாப்பாங்கரை சுரேஷ் உள்பட

9 போ் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செளந்திரபாண்டியன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் ஆய்வாளா் அழகேசன், பணம் பறித்துச் சென்ற சுரேஷ் உள்பட 9 போ் மீது வழக்குப்பதிந்து தேடி வந்தாா்.

இதைத் தொடா்ந்து, துறைமங்கலம் ரமேஷ் (42), நூத்தப்பூா் கண்ணன் (47), அனுக்கூா் செந்தில் (49), பெரம்பலூா் வசந்தா (50), சங்கீதா (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தாா்.

மேலும், கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ் வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சுரேஷ் உள்பட 4 பேரை போலீஸாா் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com