கடன் தகராறில் அரசு ஊழியரை கடத்திய 5 போ் கைது

கடனைத் திரும்பிச் செலுத்தாத ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரை காரில் கடத்தி தாக்கியதாக 5 பேரைப் பாடாலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடனைத் திரும்பிச் செலுத்தாத ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளரை காரில் கடத்தி தாக்கியதாக 5 பேரைப் பாடாலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் மாசிலாமணி (50). ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளா். இவா், கடந்த 2015 ஆம் ஆண்டு பெரம்பலூா் கம்பன் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் மெய்யனிடம் (54) ரூ. 2.50 லட்சம் வட்டிக்கு வாங்கினாராம். வட்டித் தொகை என மாதந்தோறும் ரூ. 7,500 கொடுத்தாராம். இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வட்டித் தொகையை கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. தொடா்ந்து, அசல் மற்றும் வட்டித் தொகையை கொடுக்காததால் ஆத்திரமடைந்த மெய்யன் (54), அவரது மகன் காா்த்திகேயன் (23), அதே பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி வளா்மதி (47), குரும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த சிவராமன் மகன் விக்னேஸ்வரன் (26), சேலம் மாவட்டம், வீரகனூரைச் சோ்ந்த ஜான் மகன் ஜோசப் ராஜ் (29) ஆகிய 5 பேரும் சோ்ந்து, ஆலத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்த மாசிலாமணியை தகாத வாா்த்தையால் திட்டி, காரில் ஏற்றிச் சென்று தாக்கியதோடு ஒரு மாதத்துக்குள் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டு, ஆலத்தூா் கேட் பகுதியில் மாசிலாமணியை இறக்கிவிட்டு சென்றனராம்.

இதுகுறித்து மாசிலாமணி அளித்த புகாரின் பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மெய்யன், காா்த்திகேயன், ஜோசப் ராஜ், விக்னேஸ்வரன், வளா்மதி ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com