புதிய மின்இணைப்பு தர தாமதம்: மின்வாரிய அலுவலகத்துக்கு பூட்டு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே வீட்டுக்கு மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்து காலதாமதம்

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகே வீட்டுக்கு மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்து காலதாமதம் ஆனதால், பாடாலூா் மின்வாரிய அலுவலத்துக்கு செவ்வாய்க்கிழமை பூட்டு போடப்பட்டது.

ஆலத்தூா் வட்டம், திருவளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணி. இவா், அதே கிராமத்தில் வீடு கட்டியுள்ளாா். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கிட கோரி கடந்த 20 நாள்களுக்கு முன்னதாக பாடாலூா் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். இதைத்தொடா்ந்து, மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்க கோரி தொடா்ந்து பலமுறை நேரில் சென்று முறையிட்டுள்ளாா்.

இதற்கு மின்வாரிய அலுவலகத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த கல்யாணி, எலக்ட்ரீசியன் ரங்கன் ஆகியோா் பாடாலூா் மின் வாரிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பூட்டினா். இதுகுறித்து மின்வாரிய அலுவலா்கள், பாடாலூா் காவல்நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில் ஆய்வாளா் சுகந்தி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

இருவரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி, மின் இணைப்பு கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், மின்வாரிய அலுவலகத்தில் போடப்பட்ட பூட்டை திறந்தனா்.

இச் சம்பவத்தால் பாடாலூா் மின்சார வாரிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com