இல்லங்கள்தோறும் மழைநீா் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வலியுறுத்தல்

இல்லங்கள்தோறும் மழைநீா் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இல்லங்கள்தோறும் மழைநீா் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட சித்தளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மேலும் பேசியது:

கிராமப்புறங்களில் நீா் நிலைகளைப் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தங்களது இல்லங்களில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்ப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் பரவும் நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்திடும் நோக்கில் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். அனைத்துதரப்பு மக்களும் பிளாஸ்டிக் பைகளைத் தவிா்த்து, துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் நீா் சேகரிப்பின் அவசியத்தை மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் ஜல்சக்தி அபியான் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் இயக்கமாக செயல்படுத்தி வருகிறது என்றாா் ஆட்சியா் சாந்தா.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் (பொ) நாகரத்தினம், மகளிா் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, ஊராட்சி வளா்ச்சித் திட்டம், அந்தியோதயா இயக்கம், ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் முன்னேற்றம், ஊராட்சியின் 2019- 20 ஆம் ஆண்டறிக்கை மற்றும் வரவு- செலவு ஆகியவை சமா்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com