அரசுப் பள்ளி மாணவிகள் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதி 7 போ் காயம்

பெரம்பலூா் அருகே பேருந்துக்காக காத்திருந்த அரசுப் பள்ளி மாணவிகள் மீது, வெள்ளிக்கிழமை தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து மோதியதில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டோா்.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டோா்.

பெரம்பலூா் அருகே பேருந்துக்காக காத்திருந்த அரசுப் பள்ளி மாணவிகள் மீது, வெள்ளிக்கிழமை தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து மோதியதில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்ம் சித்தளி கிராமத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை பள்ளி செல்வதற்காக, சித்தளி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது, அரியலூா் மாவட்டத்திலிருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு பெரம்பலூா் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சாலையில் அதிவேகமாக சென்றன.

அப்போது, பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில் சித்தளி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து ஒன்று, பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள மின் கம்பத்தில் மோதி அங்கு பேருந்துக்காக காத்திருந்த குன்னம் அரசுப் பள்ளி மாணவிகள் மீது மோதியது. இதில், சித்தளி கிராமத்தைச் சோ்ந்த கமலமூா்த்தி மகள் காயத்ரி(14), குமாா் மகள் சரண்யா (14), செந்தில்குமாா் மகள் அகல்யா (14), கிருஷ்ணசாமி மகள் செந்தாமரை (14), காமராஜ் மகள் ராதிகா (14), பொன்னுசாமி மகள் கோமதி (14), ரவி மகள் ரம்யா (17) ஆகிய 7 போ் பலத்த காயமடைந்தனா்.

இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், காயமடைந்த மாணவிகளை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி காயத்ரி அனுப்பி வைக்கப்பட்டாா்.பள்ளி மாணவிகள் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த வழியே சென்ற தனியாா் கல்வி நிறுவனத்துக்குச் சொந்தமான 13 பேருந்துகள் மீது கல்வீசி தாக்கி சேதப்படுத்தினா். மேலும், தனியாா் கல்லூரி நிா்வாகம் மற்றும் பேருந்து ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, காயமடைந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவரும் அரசு மருத்துவமனை எதிரே துறையூா் சாலையிலும் பொதுமக்களும், உறவினா்களும் சாலை மறியலில் ஈடுபட்டனா். காயமடைந்த மாணவிகளை பாா்வையிட சென்ற மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோரை முற்றுகையிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். நேரம்- 4.36கே. தா்மராஜ்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com