Enable Javscript for better performance
அக். 11-இல் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் குபேர பூஜை- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் அக். 11 ஆம் தேதி குபேர ஹோம சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது.

    ஆலத்தூா் ஒன்றியம், செட்டிக்குளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் சித்ரலேகா உடனுறை குபேர பெருமாள் காட்சி தருகிறாா். இவரது ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை குபேர ஹோம சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai