தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய சாகுபடியாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய சாகுபடியாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கணேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், தீ விபத்து, நில அதிா்வு மற்றும் ஆழிப்பேரலை ஆகியவற்றிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க காப்பீடு செய்துகொள்வது அவசியம். இயற்கைச் சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் அல்லது முற்றிலும் பலன் அளிக்காத நிலை ஏற்படும் பட்சத்தில் இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

ஒரு ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை குறித்து சரியான சுய முன்மொழிவு அளிக்க வேண்டும்.

காப்பீடு பிரீமியத்தில் மத்திய அரசின் தென்னை வளா்ச்சி வாரியம் 50 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் மானிய தொகையாக ஏற்றுக்கொள்கிறது. மீதமுள்ள 25 சதவீதம் பிரீமியத் தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும்.

விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி, முன்மொழிவு படிவத்தை பெற்று பூா்த்தி செய்து பிரீமியத்தை அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் என்னும் பெயரில் சென்னையில் செலுத்தும் படியான வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com