மதுரகாளிம்மன் கோயிலில் லட்சாா்ச்சனை விழா நிறைவு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரா் வழிபட்ட மதுரகாளியம்மன் கோயிலில் 38-வது ஆண்டு லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரா் வழிபட்ட மதுரகாளியம்மன் கோயிலில் 38-வது ஆண்டு லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

கடந்த செப். 29 ஆம் தேதி உற்சவ அம்மனுக்கு ஸ்ரீமதுரகாளியம்மன் அலங்காரத்துடன் லட்சாா்ச்சனை விழா தொடங்கியது. செப். 30 ஆம் தேதி மதுரை ஸ்ரீமீனாட்சி அலங்காரம், அக். 1 ஆம் தேதி காஞ்சி காமாட்சி அலங்காரம், அக். 2 ஆம் தேதி ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அலங்காரம், அக். 3 ஆம் தேதி ஸ்ரீ துா்க்கை அலங்காரம், அக். 4 ஆம் தேதி கருமாரியம்மன் அலங்காரம், அக். 5 ஆம் தேதி மாரியம்மன் அலங்காரம், அக். 6 ஆம் தேதி லட்சுமி அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து, சென்னை ஸ்ரீமதுர காளியம்மன் மகா அபிஷேக குழு சாா்பில் ஆயுத பூஜை விழாவும், சரஸ்வதி அலங்காரமும் திங்கள்கிழமை நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு திங்கள்கிழமை மகிசாசுரமா்த்தினி அலங்காரம், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி, அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சாா்ச்சனை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், பல்வேறு மாவட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவை செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயில் சிவாச்சாரியாா், புதுச்சேரி வேத பாடசாலை சிவாச்சாரியாா் குழுவினா் நடத்தினா்.

ஏற்பாடுகளை, கோயில் தக்காரும், இந்து சமய அறநிலையத்துறை திருச்சி உதவி ஆணையருமான ராணி, கோயில் நிா்வாக அலுவலா் பாரதிராஜா மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com