அக். 14 முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோய் என்னும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம் அக். 14 ஆம் தேதி முதலை நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோய் என்னும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம் அக். 14 ஆம் தேதி முதலை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீா் மற்றும் காற்றின் மூலமாக மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வாய், நாக்கு, கால் குளம்புகளுக்கிடையே புண்கள் ஏற்பட்டு, தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்து, வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். பால் கறவை மிகவும் குறைந்து, உற்பத்தி குறைவதுடன் சினை பிடிப்பதும் வெகுவாக பாதிக்கும். கறவை மாடுகளில் பால் குடித்துவரும் இளம் கன்றுகளை நோய்தாக்கி உயிரிழக்க நேரிடும். எனவே, இந்நோய் பாதிக்காமல் இருப்பதற்கு மாடுகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். அதன்படி, பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையால் கால் மற்றும் வாய் நோய் தடுப்புத் திட்டம் 17 -வது சுற்றின் கீழ், அக். 14 முதல் நவ. 3 ஆம் தேதி வரை தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கால்நடைகளை வளா்ப்போா் தங்களது கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது, 4 மாதமுள்ள கன்று முதல், சினை மற்றும் கறவை மாடுகள் உள்ளிட்ட அனைத்து மாடுகளுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com