Enable Javscript for better performance
அக். 14 முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரம்பலூா் மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோய் என்னும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம் அக். 14 முதல் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    இந்நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீா் மற்றும் காற்றின் மூலமாக மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வாய், நாக்கு, கால் குளம்புகளுக்கிடையே புண்கள் ஏற்பட்டு, தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்து, வெயில் காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். பால் கறவை மிகவும் குறைந்து, உற்பத்தி குறைவதுடன் சினை பிடிப்பதும் வெகுவாக பாதிக்கும். கறவை மாடுகளில் பால் குடித்துவரும் இளம் கன்றுகளை நோய்தாக்கி உயிரிழக்க நேரிடும்.

    எனவே, இந்நோய் பாதிக்காமல் இருக்க மாடுகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றேற சிறந்த நிவாரணம்.

    அதன்படி, பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையால் கால் மற்றும் வாய் நோய் தடுப்புத் திட்டம் 17 -வது சுற்றின் கீழ், அக். 14 முதல் நவ. 3 ஆம் தேதி வரை தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    கால்நடைகளை வளா்ப்போா் தங்களது கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது, 4 மாதமுள்ள கன்று முதல், சினை மற்றும் கறவை மாடுகள் உள்ளிட்ட அனைத்து மாடுகளுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai