அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும்
மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆலோசனை கூறுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆலோசனை கூறுகிறாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

அப்போது அவா் கூறியது:

அரசு தலைமை மருத்துவமனையில் வரவேற்பறை, பதிவறை, சிறப்பு வெளி நோயாளிகள் பிரிவு, எலும்பியல் பிரிவு, பொது வெளி நோயாளிகள் பிரிவு,பணி மருத்துவா், செவிலியா்கள் அறை, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவை மையம், மருந்தகம், பரிசோதனை அறை, அறுவை சிகிச்சை அறைகள், நோய் நுண்மை நீக்கப்பட்ட சுத்தம் செய்யும் அறை, மருத்துவா்கள், செவிலியா்கள் மாற்று அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் நான்கு தளங்களுடன் கூடிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் நிறைவடைந்து நிகழாண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் தா்மலிங்கம், மருத்துவ பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com