உடற்கல்வி இயக்குநா், ஆசிரியா்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சி தொடக்கம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில், உடற்கல்வி இயக்குநா் மற்றும்

தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில், உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான 3 நாள் மனவளக்கலை யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூரில் உள்ள அறிவுத் திருக்கோயில் வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, பெரம்பலூா் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். உடற்கல்வி ஆய்வாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மனவளக்கலை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் சுந்தா், யோகா பயிற்சியின் பயன் குறித்தும், தியானம் மற்றும் மூச்சு பயிற்சி குறித்தும் பேசினாா். துணை பேராசிரியா்கள் மாலா மற்றும் வெற்றிச்செல்வி ஆகியோா் யோகா பயிற்சி செயல்முறை விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில், துணை பேராசிரியா்கள் கீதா, அனிதா மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

இம்முகாமில் பயிற்சி பெறும் ஆசிரியா்கள், பள்ளிகளில் மாணவா்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிக்க உள்ளனா். இப் பயிற்சியின் மூலம் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளின் உடல் மற்றும் மனதை வளப்படுத்துவதே நோக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com