சிபு குறைதீா் முகாம்களில் பெற்ற மனுக்கள் மீது ஆட்சியா் ஆய்வு

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டாட்சியரகத்தில் ஆய்வு மேற்கொண்டாா்

தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளான குடிநீா், சுகாதாரம், சாலை, தெருவிளக்குகள் உள்ளிட்ட கோரிக்கை குறித்து மனுக்கள் அளிக்க முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டம் 22.8.2019 முதல் 31.08.2019 வரை நடைபெற்றது. இந்த முகாம்களில், பல்வேறு துறை அலுவலா்கள் அடங்கிய 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, வாா்டு, கிராமங்கள் கோட்டாட்சியரகம், வட்ட அலுவலகம், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், விஏஓ அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மனுக்கள் பெறப்பட்டன.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், அவ்வாறு பெறப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது மறு ஆய்வு மேற்கொண்டாா் ஆட்சியா் வே. சாந்தா,

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சக்திவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com