Enable Javscript for better performance
பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுதிட்டத்தில் பயன்பெற அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

    By DIN  |   Published on : 12th October 2019 06:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூா்: பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் 2019- 20 ஆம் ஆண்டுக்கு சிறப்பு பருவம் பயிா்களான நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் ஆகிய பயிா்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் இணைய பிரிமியத் தொகையை வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாகச் செலுத்தலாம். பயிா்க் கடன் மற்றும் விவசாய நகைக்கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து பிரிமிய தொகை கட்டாயமாகவும், கடன் பெறாத விவசாயிகளிடம் விருப்பத்தின்பேரிலும் பிரிமியத் தொகை செலுத்தி பியா் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.

    குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கணினி சிட்டா, அடங்கல், கணக்கு வைத்துள்ள வங்கிப் புத்தக முதல் பக்க நகல் ஆகிவற்றுடன் செல்லிடப்பேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வணிக வங்கிகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், கடன் பெறாத விவசாயிகள் பொதுச் சேவை மையங்கள் மூலம் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

    பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு நெல், சம்பா பயிருக்கு ரூ. 487.5, மக்காச்சோளத்துக்கு ரூ. 334.5, பருத்திக்கு ரூ. 1,365 செலுத்த வேண்டும். பிரிமியம் செலுத்த நெல், சம்பாவுக்கு 30.11.2019, மக்காச்சோளம், பருத்திக்கு முறையே 15.11.2019 மற்றும் 31.10.2019 ஆம் தேதி கடைசி நாளாகும்.

    நிகழாண்டு சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட உள்ள நெல், சம்பா பயிருக்கு 106 வருவாய் கிராமங்கள், மக்காச்சோளத்துக்கு 147 வருவாய் கிராமங்கள், பருத்தி 138 கிராமங்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே, அதிகளவில் விவசாயிகள் முன்வந்து பயிரிட்டுள்ள மற்றும் பயிரிடப்படவுள்ள சிறப்பு பருவம் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்துகொள்ளலாம். மேற்கண்ட பயிா்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களின் விவரம் மற்றும் இத்திட்டம் தொடா்பான விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai