Enable Javscript for better performance
மின்வாரிய அலுவலா்வீட்டில் 15 பவுன் நகை,ரூ. 1 லட்சம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய அலுவலா் வீட்டில் 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

    By DIN  |   Published on : 12th October 2019 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூா் நகரில் மின்வாரிய நிா்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை வெள்ளிக்கிழமை உடைத்து, 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா்.

    பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.கே.சி நகரைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (58), மின் வாரிய நிா்வாக அலுவலா். பணி நிமித்தமாக இவா் வெள்ளிக்கிழமை திருச்சிக்கும், அவரது மனைவி சின்னம்மாள் வீட்டை பூட்டிவிட்டு, அவரது தங்கையுடன் அருகிலுள்ள கோயிலுக்கும் சென்றிருந்தனா். மகன் சத்யநாராயணன் பள்ளிக்குச் சென்றிருந்தாா். இதையறிந்த மா்ம நபா்கள் சிலா், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 15 பவுன் நகை, ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்றனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai