டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் மழைக் காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களை
பெரம்பலூா் சாமியப்பா நகரில் நடைபெறும் பணிகளைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
பெரம்பலூா் சாமியப்பா நகரில் நடைபெறும் பணிகளைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்டத்தில் மழைக் காலங்களில் பரவும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தால் பெரம்பலூா் சாமியப்பா நகா், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பாதங்கி கிராமத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரம், நகராட்சி அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கும் அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை கட்டுப்பாட்டு மையம் இயங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோா் தனியாா் மருந்துக் கடைகளுக்குச் சென்று ஊசி, மருந்து மாத்திரைகள் மூலமாக தனிப்பட்ட முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.

மருத்துவா்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனா். பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த நடமாடும் மருத்துவக் குழுவினா், மருத்துவ முகாம்களை மேற்கொண்டு வருகின்றனா். அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் மூலம் குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய, சுகாதார ஆய்வாளா்கள் கொண்ட குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள கையேடுகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் விவரங்கள் பெறப்பட்டு, அப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தெய்வநாயகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) ஹேமசந்த்காந்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் (பொ) ஸ்ரீராம், நகராட்சி ஆணையா் (பொ) ராதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com