பெரம்பலூரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.
பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

பெரம்பலூா்: பெரம்பலூரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பொது சுகாதாரத்துறை மற்றும் பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்பட்ட இப்பேரணியை, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

பெரம்பலூா் பாலக்கரைப் பகுதியில் தொடங்கிய இப் பேரணி வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

இப்பேரணியில் பங்கேற்றற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டெங்கு ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி, முழக்கமிட்டுச் சென்றனா்.

முன்னதாக, சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவா்களைக் கொண்டு இயங்கும் தூய்மை தூதுவா் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்களுக்கு தூய்மை தூதுவா் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் சாந்தா வழங்கினாா்.

பேரணியில் மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் (பொ) ஹேமசந்த் காந்தி, மாவட்ட மலேரியா அலுவலா் ஆா். சுப்ரமணியன், நகராட்சி ஆணையா் (பொ) ஆா். ராதா, வட்டார மருத்துவ அலுவலா் எஸ். வசந்தா, மாவட்ட தொற்றா நோய் திட்ட அலுவலா் ம. விவேகானந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com