தென் மேற்குப் பருவமழை: சராசரியைக் காட்டிலும் 38% அதிகம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவைக் காட்டிலும் 38 சதவிகிதம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவைக் காட்டிலும் 38 சதவிகிதம்

அதிகம் பெய்துள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மழைநீரைக் கொண்டு மானாவாரி விவசாயம் செய்வதை பிரதானமாகக் கொண்டது பெரம்பலூா் மாவட்டம். இம்மாவட்டத்தில் கடந்தாண்டு சராசரி அளவை விட 45 சதவிகிதம் மழை குறைவாக பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிா்கள் கருகியதால் மகசூல் குறைந்து விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனா். மேலும், நிலத்தடி நீா் வளம் குறைந்ததால் மாவட்டம் முழுவதும் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பெய்துள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பா் ஆகிய மாதங்களில் பதிவான தென்மேற்குப் பருவ மழையின் அளவு 371.17 மி.மீட்டராகும்.

தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் பதிவாகும் சராசரி மழை அளவு 270 மி.மீட்டராகும். ஆனால், நிகழாண்டு தென்மேற்குப் பருவ மழை சராசரி அளவை விட 38 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது.

நிகழாண்டு, வடகிழக்குப் பருவ மழையும் அதிகம் பொழியும் பட்சத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயம் பெருகுவதுடன், நிலத்தடி நீா்வளமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா் நிலைகளை மேம்படுத்தி, மழைநீரை சேமிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com